அரசியலில் அதிரடி திருப்பம்… CM – கள் ராஜினாமா செய்த தொகுதிகளுக்கு… EC வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

By Swetha on புரட்டாதி 7, 2026

Spread the love

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதுச்சேரியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் என். ரங்கசாமி, தனது தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல, மேற்குவங்கத்தில் இரு தொகுதிகளில் வெற்றி பெற்று முதலமைச்சரான சுவேந்து அதிகாரி, தனது நந்திகிராம் தொகுதியை ராஜினாமா செய்ததை அடுத்து, அப்பகுதியிலும் மற்றும் ரெஜிநகர் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதேநாளில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பிரத்யுத் போர்டோலோய் தனது நாகோன் மக்களவைப் பதவியை ராஜினாமா செய்ததால், காலியாக உள்ள அந்த நாடாளுமன்றத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தவுடன் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.