வங்கியில் வேண்டுமென்றே 1,156 கிராம் நகைகளை தவறவிட்ட பர்தா பெண்… ‘கடைசியில் நடந்த ட்விஸ்ட்’…சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!!

Spread the love

சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் கிளை மேலாளரான அகமது காதிரி, கடந்த 05.12.2025 அன்று வங்கி வளாகத்தில் கிடந்த ஒரு மணிபர்ஸைக் கண்டெடுத்தார். அதில் சுமார் 1,34,95,000 ரூபாய் மதிப்புள்ள 1156.50 கிராம் தங்க நகைகள் இருந்தன. இது குறித்து சக ஊழியர்களிடம் விசாரித்த மேலாளர், அங்கிருந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்தபோது, பர்தா அணிந்த பெண் ஒருவர் அந்த பர்ஸைத் தவறவிட்டுச் சென்றதைக் கண்டறிந்தார்.

நகைகளைத் தேடி ஐந்து நாட்களாகியும் யாரும் வராத நிலையில், மேலாளர் அகமது காதிரி இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு (EDF-3) போலீஸாரிடம் புகாரளித்தார். போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், அந்த நகைகளைத் தவறவிட்டது அதே வங்கியில் முன்னர் பணியாற்றிய பத்மபிரியா என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

பத்மபிரியா மீது ஏற்கனவே அந்த வங்கியின் லாக்கரில் இருந்த வாடிக்கையாளர்களின் நகைகளைத் திருடியதாக மத்திய குற்றப்பிரிவில் வழக்கு நிலுவையில் இருப்பதும், அந்த வழக்கில் அவர் ஜாமீனில் வெளியே வந்திருப்பதும் தெரியவந்தது. தான் திருடிய நகைகளை யாருக்கும் தெரியாமல் மீண்டும் வங்கி லாக்கரிலேயே வைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில், தன்னை யாரும் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக பர்தா அணிந்து பத்மபிரியா வங்கிக்கு வந்துள்ளார்.

வங்கிக்கு வந்த பத்மபிரியாவால் திட்டமிட்டபடி நகைகளை லாக்கரில் வைக்க முடியாததால், பதற்றத்தில் அவற்றை வங்கியிலேயே விட்டுச் சென்றுள்ளார். கிளை மேலாளர் அளித்த புகாரால் பத்மபிரியாவின் இந்தத் திட்டம் முறியடிக்கப்பட்டு, அவர் மீண்டும் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தற்போது வங்கி அதிகாரிகளுடன் இணைந்து பத்மபிரியாவின் பின்னணி மற்றும் அவர் செய்துள்ள இதர முறைகேடுகள் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

8 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

8 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

8 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago