சிம்புவின் வெந்து தணிந்தது காடு டிரைலர் ரிலீஸ்…!!! கூல் சுரேஷ் அளித்த பேட்டி…!!! பரபரப்பில் ரசிகர்கள்…!!!

By Begam on புரட்டாதி 4, 2022

Spread the love

தமிழ் திரையுலகின் முன்னணிநடிகர்களில் ஒருவரான  விஜய். டி. ராஜேந்திரன் அவர்களின் மகன் நடிகர் சிம்பு. இவர் ‘சிலம்பரசன்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தந்தை இயக்கிய ‘காதல் அழிவதில்லை’ திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார்.

   

வானம், விண்ணைத்தாண்டி வருவாயா, கோவில், மன்மதன், சிலம்பாட்டம், ஈஸ்வரன், மாநாடு போன்ற எண்ணற்ற திரைப்படங்களில் பிரபலமாகி உள்ளார். தற்பொழுது இவர் நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற படம் ரிலீஸ்க்கு தயாராகி  வருகிறது. இப்படத்தின் டிரைலர் உலகநாயகன் கமலஹாசன் அவர்களால் வெளியிடப்பட்டது.

   

 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூல் சுரேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘படத்தின் டிரெய்லர் மாஸாக உள்ளது. படம் கண்டிப்பாக வெற்றி அடையும்.நான் இந்த நல்ல நிலைமைக்கு வர காரணம் STR  தான். எனக்கு இவ்வளவு ரசிகர்கள் கிடைத்ததற்கு காரணம் என் தலைவர் தான்’.

‘வெந்து தணிந்தது காடு, என் தலைவன் STR க்கு  வணக்கத்தை போடு’ என்று ஆனந்த கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார். இப்பேட்டி சமூக வலைத்தளங்களில்  வெளியாகி உள்ளது .