மனித மிருகங்களின் கொடூர பொழுதுபோக்கு..! நேருக்கு நேர் மோதி மண்ணில் சாய்ந்த காளைகள்… உயிரோட இப்படியா விளையாடுவீங்க…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 10, 2026

Spread the love

சமூக வலைத்தளமான X தளத்தில் 2.2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஒரு வீடியோ, மனிதர்களின் பொழுதுபோக்கிற்காக விலங்குகள் சித்திரவதை செய்யப்படுவதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

அந்த வீடியோவில், இரண்டு பெரிய காளைகள் மிகுந்த ஆக்ரோஷத்துடன் அதிவேகத்தில் ஓடிவந்து நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றன. மோதிய அடுத்த நொடியே அந்த அதிர்ச்சியின் தீவிர தாங்க முடியாமல் இரண்டு காளைகளும் தரையில் சுருண்டு விழுகின்றன. அதில் ஒரு காளை மூளை அதிர்ச்சியால் சுயநினைவை இழந்து மயங்கி விழ, மற்றொரு காளை உடல் நடுங்கி வலிப்பில் துடிக்கிறது.

   

இந்தக் கொடூரமானக் காட்சியைக் கண்ட இணையவாசிகள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் கொந்தளித்துப் போய் கருத்து தெரிவித்து வருகின்றனர். “விலங்குகளுக்கு வலிக்கும் உணர்வு உண்டு. பொழுதுபோக்கிற்காக அவற்றின் உயிரோடு விளையாடும் மனிதர்களே பூமியின் மிகக் கொடூரமான மிருகங்கள்” எனப் பலரும் தங்களது கோபத்தையும் ஆதங்கத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.