அடேங்கப்பா…! ரூ.8 கோடி மதிப்பு…. ” தினமும் முந்திரி, பாதாம் சாப்பிடும் எருமை…” ஆண்டுக்கு 50 லட்சம் வருமானம் ஈட்டும் விவசாயி…!!

By Devi Ramu on ஐப்பசி 11, 2025

Spread the love

ஹரியானாவை சேர்ந்த விவசாயியான நரேந்திர சிங் தான் வளர்க்கும் எருமை மாட்டுடன் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெறும் விவசாயிகளுக்கான சிறப்பு சந்தையில் பங்கேற்றார். அங்கு வருபவர்கள் நரேந்திர சிங்கின் எருமையை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். விற்பனைக்காக இல்லாமல் காட்சிக்காக மட்டுமே எருமையை அழைத்து வந்துள்ளார். அதன் மதிப்பு 8 கோடி ரூபாய். அந்த எருமைக்கு எம்எல்ஏ என பெயர் வைத்துள்ளார்.

இதுகுறித்து நரேந்திர சிங் கூறும் போது, முர்ரா எனும் உயர்வகை இனத்தை சேர்ந்த இந்த எருமை தினமும் 8 லிட்டர் பால், நெய், முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவை சாப்பிடும். இரண்டு ஆண்டுகளாக வட மாநிலங்களில் எந்த சந்தேகத்தை சென்றாலும் எம்எல்ஏ-விற்கு சிறப்பு பரிசு கிடைக்கும். மேலும் இந்த எருமையின் விந்தணுவை விற்பனை செய்து ஆண்டுக்கு கிட்டத்தட்ட 50 லட்சம் வரை நரேந்திர சிங் வருமானம் ஈட்டுகிறார்.