“ஷாப்பிங் மாலில் டெலிவரி பாயை எட்டி உதைத்து வெறியாட்டம்…” செக்யூரிட்டி கார்டின் கொடூர தாக்குதல்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!

By Devi Ramu on புரட்டாதி 23, 2026

Spread the love

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜோகிவாலா பகுதியில் அமைந்துள்ள பிரபல ஷாப்பிங் மால் வளாகத்தில், டெலிவரி பாய் ஒருவர் உணவு மற்றும் பார்சல்களை டெலிவரி செய்வதற்காக வந்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த செக்யூரிட்டி கார்டு, அந்த டெலிவரி ஊழியருடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த செக்யூரிட்டி கார்டு அந்த டெலிவரி பாயை மிகக் கொடூரமாக தகாத வார்த்தைகளால் பேசி, அவரது வயிறு மற்றும் முகத்தில் கை, கால்களால் சரமாரியாக மிதித்து, குத்தியுள்ளார்.

   

பாதிக்கப்பட்ட டெலிவரி ஊழியர் கைகூப்பித் தடுத்தபோதிலும், செக்யூரிட்டி கார்டு நிறுத்தாமல் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இக்கொடூர தாக்குதல் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாய் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து டேராடூன் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.