“திரஹாமில் சம்பளம், ஆனா கையில் ஒண்ணுமே இல்ல”…. துபாயின் கொடூர நிதர்சனத்தை உடைத்த கொல்கத்தா சமையல் கலைஞர்… ஷாக்கிங் வீடியோ….!

By Nanthini on புரட்டாதி 23, 2026

Spread the love

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் ராகுல் பாலா என்பவரின் இன்ஸ்டாகிராம் பதிவு, வெளிநாட்டு வேலை பற்றிய கனவுகளுடன் இருக்கும் பல இந்திய இளைஞர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவிலிருந்து துபாய்க்குப் புலம்பெயர்ந்த அவர், துபாயில் உள்ள கடினமான வாழ்க்கைச் சூழல் மற்றும் அதிகப்படியான செலவுகள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். துபாய் திரஹாமை (AED) இந்திய ரூபாய்க்கு மாற்றும்போது அது பெரிய தொகையாகத் தோன்றினாலும், அங்கு தங்கி வாழும்போதுதான் அன்றாடச் செலவுகளின் உண்மையான பாரம் புரிகிறது என்றும், முறையான திட்டமிடல் இல்லாமல் துபாய்க்கு வர வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

துபாயின் நிதர்சனமான வாழ்க்கைச் செலவுகள் குறித்து விவரித்த ராகுல், அங்கு ஒரு நேர சாதாரண உணவிற்கே குறைந்தபட்சம் 10 திரஹாம் (சுமார் ₹260) வரை செலவழிக்க வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக, மாதத்திற்கு 2,500 திரஹாம் சம்பளம் வாங்குபவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ₹65,000 கிடைத்தாலும், தங்குமிடம், உணவு மற்றும் குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கே பெரும்பகுதி பண விரயமாகிவிடும். இதனால் செலவுகள் போகக் கையில் எஞ்சும் சேமிப்புத் தொகை மிகவும் சொற்பமானதாகவே இருக்கும் என்பதால், சொந்த ஊரில் வாழும் எளிய வாழ்க்கையின் அருமை துபாய்க்கு வந்த பிறகே தமக்கு முழுமையாகப் புரிந்ததாக அவர் ஆதங்கத்துடன் பகிர்ந்துள்ளார்.

   

https://www.instagram.com/reel/Ddi7_gzsKeo/?utm_source=ig_embed&ig_rid=AxjSLLe8C4k1UoFvxZv782-

   

இவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, வெளிநாட்டில் வாழும் பல இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்குப் பதிலளித்த இணையவாசி ஒருவர், “போதிய பணமும் வருமானமும் இல்லை என்றால் துபாய் வாழ்க்கை மிகவும் கடினமானது” எனக் கருத்து தெரிவித்துள்ளார். அதேவேளையில், அனுபவம் வாய்ந்த நபர்கள் சிலர் அவருக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளித்துள்ளனர். ஆரம்பத்தில் குறைந்த சம்பளத்தில் தொடங்கி, பின்னர் தங்களின் தொடர் உழைப்பால் நல்ல நிலையை அடைந்ததாகக் கூறியுள்ள அவர்கள், நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து உழைத்தால் நிச்சயம் உயர்ந்த சம்பளமும் பிரகாசமான எதிர்காலமும் சாத்தியமாகும் என ஊக்குவித்துள்ளனர்.