குஜராத் ஜுனாகத் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தில் உள்ள ஆல்பா சர்வதேச பள்ளியில் உள்ள ஹாஸ்டலில் ஒரு மாணவரை சக மாணவர்கள் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. ஒரு மாணவரை மற்ற மாணவர்கள் அறைவதும் கண்மூடித்தனமாக உதைப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த நிலையில் தற்போது அது குறித்த வீடியோ வெளியாகி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் உடனே போலீசில் புகார் அளித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே சம்பந்தப்பட்ட மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிகிறது. இந்த மிருகத்தனமான தாக்குதலுக்கு பின்னால் உள்ள உடனடி காரணம் என்ன என்று இதுவரை கண்டறியப்படவில்லை. அங்குள்ள பள்ளியில் தற்போது அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது அந்த வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
Heartbreaking footage from Junagadh, Gujarat, reveals students brutally assaulting a younger guy in a private hostel, sparking outrage and calls for action against bullying
https://t.co/GspTASilzl— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 4, 2025
