புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி சென்னையில் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் டிஜிபி அலுவலக வாசலில் நின்ற அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர் செருப்பால் தாக்கியது அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. அந்த சமயத்தில் ஏர்போர்ட் மூர்த்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து விசிக கட்சியினர் அளித்த புகாரியின் அடிப்படையில் ஏர்போர்ட் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
