காலையிலேயே இபிஎஸுக்கு ஷாக்… செங்கோட்டையன் எடுத்த திடீர் முடிவு… அதிமுகவில் மீண்டும் வெடிக்கும் பூகம்பம்…!

By Nanthini on புரட்டாதி 8, 2025

Spread the love

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்தது. இதனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் வாக்குவாதம் எழுந்த நிலையில் ஒரு கட்டத்தில் கட்சியிலிருந்து ஓபிஎஸ் முழுமையாக நீக்கப்பட்ட பொதுச் செயலாளர் பொறுப்பை இபிஎஸ் ஏற்று கொண்டார். இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகிய நிலையில் சமீபத்தில் 2026 தேர்தலுக்காக இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதன் வெளிப்பாடாக செங்கோட்டையன் பிரிந்து கிடக்கும் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என ஈபிஎஸ்-க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். ஆனால் திடீரென ஆலோசனை நடத்தி செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்குவதாக இபிஎஸ் அறிவித்தார். இது கட்சியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்து.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் செங்கோட்டையன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. பிரிந்து சென்றவர்களை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என கெடு விதித்த செங்கோட்டையனை முக்கிய பொறுப்புகளில் இருந்து இபிஎஸ் நீக்கினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செங்கோட்டையன் தன் கருத்துக்கு அதிமுக தொண்டர்களிடம் ஆதரவு திரட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இது தற்போது ஈபிஸ்க்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது.