பெங்களூரு புறநகர்ப் பகுதியான ஆனேக்கல் நகரில் உள்ள ஏ.எஸ்.பி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ‘அம்பாரி கோப்பை-2026’ கிரிக்கெட் போட்டியின் போது, வீரர்களிடையே ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் வன்முறை மோதலாக மாறியது. பல்வேறு பகுதிகளிலிருந்து அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் போது, ஆத்திரமடைந்த வீரர்கள் ஒருவரையொருவர் துரத்திச் சென்று கிரிக்கெட் மட்டைகள் மற்றும் ஸ்டம்புகளின் மூலம் தாக்கிக் கொண்டனர்.
இந்த வன்முறைச் சம்பவம் அங்கிருந்தவர்களின் செல்போன் கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதில் வீரர்கள் ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தத் தாக்குதலில் இரண்டு நபர்கள் பலத்த காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆனேக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
https://twitter.com/HateDetectors/status/2122233206296695009/video/1
இச்சம்பவம் ஆனேக்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்றுள்ளதால், காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது மோதலுக்கான காரணம் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
