பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு… இலவசப் பேருந்து பயண அட்டை பெற முக்கிய மாற்றம்…. பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

By Nanthini on கார்த்திகை 17, 2026

Spread the love

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2026-27-ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தின் கீழ் பயனடையவுள்ள மாணவர்களின் சுயவிவரம், புகைப்படம் மற்றும் புதிதாகச் சேர்ந்த மாணவர்களின் விருப்பம் குறித்த விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப் பள்ளிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

முன்னதாக இதற்கான கால அவகாசம் அக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், விடுபட்ட மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்வதற்குக் கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று, தற்போது எமிஸ் தளத்தில் விவரங்களைப் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை வரும் நவம்பர் 20-ஆம் தேதி (20.11.2026) வரை நீட்டித்துப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

   

இது தொடர்பாகப் பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நீட்டிக்கப்பட்டுள்ள இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்தி, விடுபட்ட அனைத்து மாணவர்களின் விவரங்களையும் எமிஸ் இணையதளத்தில் விரைந்து பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.