மேகதாது அணை விவகாரம்: டெல்லி பறக்கும் தமிழக அமைச்சர்கள்.. மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டிலுடன் நடக்கப்போகும் முக்கிய பேச்சுவார்த்தை….!

By Nanthini on கார்த்திகை 17, 2026

Spread the love

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பாக, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் நவம்பர் 18-ம் தேதி டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை நேரில் சந்தித்துப் பேச உள்ளார். இந்தச் சந்திப்பின்போது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவுகளுக்கு எதிராக, கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட உள்ளது. தமிழகத்தின் வாழ்வாதாரம் மற்றும் டெல்டா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட இருக்கிறது.

இதேபோன்று, மாநிலத்தின் இதர முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் துறை சார்ந்த கோரிக்கைகளை முன்வைப்பதற்காக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மத்திய அமைச்சர்கள் சர்பானந்தா சோனோவால், மன்சுக் மாண்டவியா மற்றும் நிதின் கட்கரி ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து, சுகாதாரம், இளைஞர் நலன் மற்றும் சாலைப் போக்குவரத்து ஆகிய துறைகளில் தமிழகத்திற்குத் தேவையான திட்ட அனுமதிகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை விரைந்து பெறுவது குறித்து இந்தச் சந்திப்புகளில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.