உத்திரபிரதேசம் மாநிலத்தில் வசித்து வரும் வீரேந்திரா(40) என்பவருடைய இளைய சகோதரர் சுனில். இதனிடையே சுனிலின் மகள், வீரேந்திரா வீட்டின் முன்பு குப்பையை கொட்டியுள்ளார். இதனை கவனித்த அவர் கண்டித்துள்ளார். இது பற்றி தெரிந்ததும் சுனில் தன்னுடைய அண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது ஆத்திரமடைந்த சுனில் வீட்டிலிருந்து கோடாரியை எடுத்து வந்து வீரேந்தராவை கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது சுனிலியின் மனைவி கம்புகளால் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த வீரேந்தரா உடனடியாக மீட்க பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி வீரேந்திரா மனைவி சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசில் புகார் அளித்த நிலையில் தற்போது போலீசார் அவர்களை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். ஒரு குப்பை சண்டைக்காக சொந்த அண்ணனையே தம்பி வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"மக்களுடைய ஒரு பைசாவைக் கூட நான் தொடமாட்டேன்" என்று பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். ஊழலற்ற நேர்மையான…
"பசியின் கொடுமை என்ன என்பதை நான் நன்கு அறிவேன். நான் ஏதோ ஒரு ராஜ குடும்பத்தில் இருந்தோ அல்லது அரச…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றவுடன், மக்கள் நலன் சார்ந்த அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய விஜய், மிக முக்கியமான மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டு…
தமிழகத்தின் 17-ஆவது அமைச்சரவையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் எம்.எல்.ஏ-வுமான ஆதவ் அர்ஜுனா அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை…
தமிழக அரசியல் வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10) தமிழ்நாட்டின்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10) முதலமைச்சராகப்…