தமிழக அரசியல் வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10) தமிழ்நாட்டின் 17-வது முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்குப் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வருடன் சேர்த்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு புதிய சக்தியின் ஆட்சியைத் தமிழகத்தில் நிலைநிறுத்தியுள்ளது.
இந்த விழாவில் தேசிய மற்றும் மாநில அரசியலின் முக்கியத் தலைவர்கள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர். குறிப்பாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் கலந்து கொண்டது அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன் சிபிஐ, சிபிஎம் மற்றும் விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுப் புதிய அரசுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நேரு விளையாட்டரங்கம் தொண்டர்களின் ஆரவாரத்தால் நிரம்பி வழிந்த நிலையில், புதிய அமைச்சரவை இன்று முதல் தனது பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
தமிழக அரசியலில் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தமிழகத்தின் புதிய…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது வெற்றியில் மிக முக்கியப் பங்காற்றிய சிறுவர், சிறுமிகளுக்கும் மாணவர்களுக்கும் நெகிழ்ச்சியான முறையில் நன்றி…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பின் உரையாற்றிய விஜய், முந்தைய அரசின் நிதி நிர்வாகம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். கடந்த…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது வெற்றிக்காக உழைத்த இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். "இந்த விஜய்…
"விஜய் தவறு செய்யமாட்டான்; தவறு செய்ய அனுமதிக்கவும் மாட்டான். ஒருவேளை அப்படி யாருக்காவது எண்ணம் இருந்தால், அதை இப்போதே அழித்துவிடுங்கள்.…
"மக்களுடைய ஒரு பைசாவைக் கூட நான் தொடமாட்டேன்" என்று பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். ஊழலற்ற நேர்மையான…