முதலிரவில் மணப்பெண் சொன்ன வார்த்தை… நள்ளிரவில் எழுந்த புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி… இறுதியில் காத்திருந்தா டுவிஸ்ட்…!

By Nanthini on ஐப்பசி 3, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவருக்கும் ராஜஸ்தான் கிசான் கரை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஜிஜேந்திரா என்ற திருமணத்தரகர் மூலமாக திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இதற்காக அந்த தலைவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திருமணம் ஜெய்பூரில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்று உள்ளது. இந்நிலையில் திருமணத்தின் முதல் இரவில் தம்பதியினர் படுக்கையறைக்குச் சென்றபோது அந்தப் பெண் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி இன்று இரவு நாம் ஒன்றாக படுக்க முடியாது, இது எங்களுடைய சம்பிரதாயத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார். பிறகு அதிகாலை 3 மணியளவில் மாப்பிள்ளை தண்ணீர் குடிக்க எழுந்த சமயத்தில் அந்தப் பெண் திடீரென மாயமாகியுள்ளார். மேலும் அவருடைய அறையில் இருந்த பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தையும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து குடும்பத்தினர் உடனடியாக பெண்ணை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. உடனே போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் திருமண தரகர் மற்றும் அந்தப் பெண் இருவரும் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.