இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில் ரீசார்ஜ் கட்டணங்களை 10 முதல் 12 சதவீதம் வரை உயர்த்த டெலிகாம் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக குறைந்தபட்ச டேட்டா மற்றும் கால் திட்டங்களை 249 ரூபாயிலிருந்து 299 ரூபாயாக ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் உயர்த்தி அறிவித்தனர்.
இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திருந்த நிலையில் மீண்டும் நிறுவனங்கள் கட்டண உயர்வை அறிவித்தால் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டங்களின் விலை 40 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. தொடர்ந்து ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருவது செல்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
