தாராபுரம் அருகே பெரமியம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருடைய மகள் ரத்தினம்மாள் (30). இவருக்கு கடந்த சில மாதங்களாகவே திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. இதனிடையே வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் இவருக்கு அக்டோபர் 26ஆம் தேதி திருமணம் இருந்தது நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருந்த நிலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என மொத்த ஊருக்கும் திருமண அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் துரதிஷ்டவசமாக திருமணத்திற்கு முந்தைய நாளான நேற்று பெரும் துயரம் நிகழ்ந்தது. அதாவது ரத்தினம்மாளின் பெற்றோர் சில வேலை காரணமாக வெளியூருக்கு சென்று விட்டனர். அவர்கள் நேற்று இரவு வீடு திரும்பிய போது ரத்தினம்மாள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளன. போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் திருமணத்தை சுற்றிய சில காரணங்களால் மன உளைச்சலில் அந்தப் பெண் இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். திருமணத்திற்கு முதல் நாளே இளம் பெண் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
