தாய் வீட்டுக்கு சென்ற மனைவி… இரட்டைப் பெண் குழந்தைகளை காட்டுக்கு அழைத்துச் சென்று ஈவு இரக்கமில்லாமல் தந்தை செய்த கொடூரம்… போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

By Nanthini on ஐப்பசி 26, 2025

Spread the love

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் சவான் என்ற நபர் தன் மனைவி மற்றும் இரட்டைப் பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். குழந்தைகளுக்கு இரண்டு வயதாகின்றது. சம்பவத்தன்று ராகுல் குடும்பத்துடன் வேறு இடத்திற்கு பயணம் செய்து விட்டு வந்த நிலையில் பயணத்தின் போது அவருக்கும் அவருடைய மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கோபத்தில் மனைவி வாகனத்திலிருந்து இறங்கி தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான ராகுல் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தன்னுடைய இரட்டை பெண் குழந்தைகளை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று ஈவு இரக்கமில்லாமல் கொலை செய்துள்ளார்.

பிறகு நேராக காவல் நிலையம் சென்று தானே தன் குழந்தைகளை கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நிலையில் இரண்டு குழந்தைகளின் உடல்கள் சில பகுதிகள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. சாட்சியங்களை அழிப்பதற்காக ராகுல் குழந்தைகளின் உடலுக்கு தீ வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.