பக்கத்து வீட்டில் பேசிக் கொண்டிருந்த தாய்… திடீரென மாயமான ஒன்றை வயது குழந்தை… குளியல் அறையில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

By Nanthini on ஐப்பசி 26, 2025

Spread the love

சென்னை நந்தனத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் வாலியில் தலைக்குப்புற விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நந்தனம் ஜோகி தோட்டம் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் நான்காவது தளத்தில் ஸ்ரீராம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் சந்தான லட்சுமி என்ற மனைவியும் தனிஷ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளனர். இதனிடையே கடந்த 23ஆம் தேதி அதே தளத்தில் வசிக்கக்கூடிய அலமேலு என்பவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதை தொடர்ந்து அவரை பார்ப்பதற்காக சந்தான லட்சுமி குழந்தையை தூக்கிக் கொண்டு அவருடைய வீட்டுக்கு சென்றுள்ளார்.

குழந்தையை கீழே இறக்கிவிட்டு அலமேலுவிடம் அரண்மனை நேரத்திற்கு மேலாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என்று சந்தான லட்சுமி தேட ஆரம்பித்த நிலையில் அலமேலு வீட்டு குளியலறையில் தண்ணீர் நிரம்பி இருந்த பிளாஸ்டிக் வாளியில் குழந்தை தலை குப்புற விழுந்து மயங்கி கிடந்துள்ளது. உடனே அதிர்ச்சி அடைந்த சந்தான லட்சுமி குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.