தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் புதிய ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், ஆளுங்கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து பல்வேறு கொடும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலந்தூரில் தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் தனியாக வசிக்கும் பெண்ணிடம் அத்துமீற முயன்ற விவகாரம், மதுரையில் அரசு பேருந்து ஓட்டுநரை தவெக நிர்வாகி ஒருவர் பட்டாக்கத்தியால் வெட்டிய விவகாரம் எனத் தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்கள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளன.
இந்த வரிசையில், சேலம் மாவட்டம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி மணிகண்டன் என்பவர், பெண்களுக்கு உதவுவது போல நடித்து, சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்த விவகாரம் தற்பொழுது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மணிகண்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுங்கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களே இது போன்ற பாலியல் அத்துமீறல்களிலும், சமுதாய விரோத செயல்களிலும் ஈடுபடுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இச்சம்பவங்களைக் கடுமையாகக் கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். புதிய ஆட்சி அமைந்த நாள் முதல் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் அராஜகம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், “தன் கட்சித் தலைவர் முதலமைச்சராக இருப்பது பற்றியோ அல்லது அவர் கையில் இருக்கும் காவல்துறை மீதோ இந்த குற்றவாளிகளுக்கு எந்தவொரு பயமும் வராமல் இருப்பது ஏன்?” எனத் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி தவெக அரசைச் சாடியுள்ளார்.
மேலும், தற்போதைய முதலமைச்சர் பதவியேற்கும்போது கூறிய “எல்லாரும் நல்லா இருப்போம்” என்ற வாசகத்தைச் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, சொந்தக் கட்சி நிர்வாகிகளாலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாதபோது மக்கள் எப்படி நன்றாக இருக்க முடியும் என வினவியுள்ளார். இப்போதைய அரசு ஒரு “பொய்க்கால் குதிரை அரசு” என்று விமர்சித்துள்ள அவர், இந்த வழக்குகளில் எவ்வித அரசியல் குறுக்கீடும் இன்றி நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…