தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே சமீபத்தில் கரூரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தாலும் ஒரு சிலர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். இதனிடையே கரூர் சம்பவத்தில் விஜய்க்கும் திமுகவுக்கும் டீலிங் உள்ளதா என்ற திருமாவளவன் கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையானது. இதனால் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் தனது விமர்சனத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை எனவும் திமுக மற்றும் விசிக கூட்டணியில் முடிவு ஏற்படாது என்றும் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். கரூர் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…
திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரிஜு தத்தா, ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மா குறித்து…
தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட விஜய்க்கு, முதல் நாளிலேயே பெரும் அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. வழக்கமாகத் தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள்…
காஷ்மீரில் தெரு நாய் ஒன்று கும்பலால் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக, திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சேப்பாக்கம் -…
மூத்த பத்திரிகையாளர் துரை கருணா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி, தமிழக அரசியலில் குறிப்பாக அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம்…