‘இப்படி தான் பிரதீப் இருந்தாரு.. அதனால தான் நாங்க Red Card கொடுத்தோம்’… பிக் பாஸ் வீட்டை வெளியில் வந்த பிராவோ ஓபன் டாக்… ஷாக்கில் ரசிகர்கள்…

By Begam

Updated on:

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது 59 நாட்களை நிறைவு செய்து பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. நாளுக்கு நாள் சண்டைக்கும், சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாத இந்த நிகழ்ச்சியில் வார வாரம் போட்டியாளர்கள்  வெளியேறிக் கொண்டும் உள்ளனர். 18 போட்டியாளர்கள், 5 வைல்ட்  கார்ட் போட்டியாளர்கள் என தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்பொழுது இறுதிக்கட்டத்தையும் நெருங்கி வருகிறது. இன்னும் நிகழ்ச்சி முடிய ஒரு மாதமே இருக்கும் நிலையில், ரசிகர்கள் யாருக்கு ஆதரவு தருவது என தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

   

பொதுவாகவே 50 நாட்களை நிறைவு செய்த உடனே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வின்னர் இவர்தான் ரசிகர்கள் கணித்து விடுவார்கள். ஆனால் இந்த சீசனை பொறுத்தவரையில் யார் வெற்றியாளர்? என்பதை இதுவரை ரசிகர்களால் கணிக்க முடியவில்லை என்றே கூறலாம். ஏனெனில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் நாளுக்கு நாள் தங்களின் வெவ்வேறு முகத்தை காட்டி வருகின்றனர். இந்த சீசனில் பெரும் சர்ச்சையாக வெடித்தது ரெட் கார்டு கொடுத்து பிரதீப் வெளியேற்றப்பட்ட விவகாரம் தான்.

வீட்டில் இருக்கும் சகஹவுஸ்மேட்களால்  டார்கெட் செய்யப்பட்டு , பொய்யான குற்றச்சாட்டால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு, பிரதிப்  வெளியேற்றப்பட்டார். இதை தொடர்ந்து பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் அவர் கூலாக தன் வேலையை மட்டும் பார்த்து வருகிறார் .இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு சமீபத்தில் வெளியேறிய பிராவோ பிரதீப் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, ‘இப்போ ஒருத்தர் தாக்கி பேசுறாங்க. தர்ட் பர்சன் வியூல இருந்து பார்க்கும்போது ,அதில் நமக்கு தப்பா தெரியலை.ஆனா அவங்களுக்கு அது தப்பா தெரிந்திருக்கு.

ஆனா அந்த நேரத்துல வாய தொறக்கல .ஒவ்வொரும் எந்திரிச்சு ஒவ்வொரு விஷயமா சொல்ல ஆரம்பிச்சதால, அது ஒட்டுமொத்தமா, ஒரு குரூப்பா மாறுனதுனால ,அது ஒரு பெரிய பிரச்சினையாக கண்ணுக்கு தெரிஞ்சிச்சு. நான் என்னோட எக்ஸ்பீரியன்ஸ் வச்சு தான் கொடுத்தேன். நானும் பிரதீப்பும் நல்ல பிரண்டா தான் இருந்தோம். கமல் சார்கிட்டயும் அதைத்தான் சொன்னேன். என் கண்ணு எதிர்க்க அவன் எதுவுமே செய்யல’ என்று கூறியுள்ளா.ர் தற்பொழுது அவரின் இந்த பேட்டியானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…