மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் காதலியை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அவரது சடலத்துடன் உடலுறவு கொண்ட இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரில் எம்பிஏ படித்து வந்த சோனம் என்ற 24 வயது இளம்பெண், சக மாணவரான பியூஸ் என்பவருடன் காதலில் இருந்துள்ளார். சமீபகாலமாக சோனம் பியூஸுடன் பேசுவதைத் தவிர்த்து வந்த நிலையில், ஆத்திரமடைந்த பியூஸ் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சோனத்தை வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 12-ம் தேதி தனது பிறந்தநாள் எனக் கூறி சோனத்தை பியூஸ் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற சோனம் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் பியூஸின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சோனம் நிர்வாண நிலையில் அழுகிய சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பியூஸ் மும்பையில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. கடந்த பிப்ரவரி 16-ம் தேதி மும்பை காட்டுப் பகுதியில் வைத்து பியூஸை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், தன்னை உல்லாசத்திற்கு அழைத்தபோது சோனம் மறுத்ததால், ஆத்திரத்தில் அவரது மார்பின் மீது ஏறி அமர்ந்து மூச்சுத்திணறச் செய்து கொலை செய்ததாக பியூஸ் ஒப்புக்கொண்டார். மேலும், கத்தியால் அவரைச் சரமாரியாகக் குத்திய பிறகு, மது அருந்திவிட்டு உயிரிழந்த சோனத்தின் சடலத்துடன் உடலுறவு கொண்ட திடுக்கிடும் தகவலையும் அவர் வாக்குமூலமாக அளித்துள்ளார்.
கொலைக்குப் பிறகு தப்பியோடிய பியூஸ், தான் கொன்ற காதலியின் ஆவியுடன் பேசி மன்னிப்பு கேட்க விரும்பியுள்ளார். இதற்காக மும்பையில் உள்ள பில்லி சூனியம் செய்பவர்களின் உதவியை நாடி அங்கு சென்றதாகத் தெரிவித்துள்ளார். காதலியைத் துடிக்கத் துடிக்கக் கொன்றுவிட்டு, சடலத்துடன் வக்கிரமாக நடந்துகொண்ட காதலனின் செயல் மனிதநேயமற்ற முறையில் அமைந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது பியூஸை கைது செய்துள்ள போலீசார், அவரை சிறையில் அடைத்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2026 லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசி…
2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சந்தித்த படுதோல்வி, அக்கட்சிக்குள் நீண்டகாலமாக புகைந்து கொண்டிருந்த அதிருப்தியை தற்போது எரிமலையாக வெடிக்கச்…
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட வரிசை பெரும் அரசியல் அதிர்வலைகளை…
ஈரான் கடந்த 47 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுடன் ஆபத்தான விளையாட்டுகளை விளையாடி வருவதாக டொனால்ட் டிரம்ப் மிகக்…
விஜய் தலைமையிலான அரசு பதவியேற்றாலும், தேர்தலின் போது அளித்த பிரம்மாண்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மிகப்பெரிய நிதிச் சவாலாக இருக்கும். குறிப்பாக,…
தமிழக அரசியலில் சுமார் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவராகப் பதவியேற்றுள்ள…