ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

By Swetha on ஐப்பசி 7, 2026

Spread the love

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முல்யா ஜுவல்லர்ஸ் அருகே ஜேசிபி இயந்திரம் கொண்டு குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகளின் போது பாதசாரிகள் செல்லும் நடைபாதை தோண்டப்பட்டு, அங்கு இருந்த சாக்கடை மூடியும் அகற்றப்பட்டு எவ்வித பாதுகாப்பும் இன்றி திறந்தவெளியாகவே விடப்பட்டிருந்தது.

சம்பவத்தன்று சிறுவன் தன் குடும்பத்தினருடன் அந்தச் சால வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டுமானப் பணிகளை வேடிக்கை பார்த்தபடியே சென்றபோது, எதிர்பாராதவிதமாகத் திறந்திருந்த அந்த ஆழமான சாக்கடைக்குள் சிறுவன் நழுவி விழுந்தான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு, உடனடியாக ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் சாக்கடைக்குள் இறங்கி சிறுவனைப் பத்திரமாக வெளியே மீட்டனர்.

   

https://twitter.com/HateDetectors/status/2107804228941156518/video/1

   

நல்லவேளையாகச் சிறுவனுக்கு எவ்வித பலத்த காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். எனினும், மக்கள் நடமாட்டம் மிகுந்த பொது இடங்களில் இதுபோன்ற ஆபத்தான கட்டுமானப் பணிகளை மேற்காள்ளும்போது, முறையான தடுப்புச் சுவர்களோ அல்லது எச்சரிக்கைப் பலகைகளோ அமைக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டதே இந்த விபத்திற்குக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒப்பந்ததாரர்களின் இந்த ஆபத்தான அலட்சியப் போக்கு குறித்து அப்பகுதி மக்கள் கடும் கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளனர்.