பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

By Gayathri on ஐப்பசி 7, 2026

Spread the love

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை மாடு ஒன்று திடீரென ஆக்ரோஷமாக விரட்டித் தாக்கியுள்ளது. நிலைகுலைந்த முதியவர், கீழே விழுந்த நிலையிலும் குழந்தைக்கு எந்தக் காயமும் ஏற்படக் கூடாது என்ற நோக்கில் தன் உடலால் குழந்தையை இறுகப் பற்றிக் கொண்டு பாதுகாத்தார். இருப்பினும், விடாமல் துரத்திய அந்தக் காளை முதியவரைத் தொடர்ந்து முட்டித் தள்ளியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

முதியவரின் கூக்குரலைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கற்களையும் கம்புகளையும் வீசி பெரும் போராட்டத்திற்குப் பின் அந்தக் காளையை விரட்டியடித்தனர். உடனடியாக மீட்கப்பட்ட முதியவரும் குழந்தையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு மாடுகளால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும், இத்தகைய விபத்துகளைத் தடுக்க உள்ளாட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.