“இப்படி மண்ணை திங்க வச்சிட்டீங்களே” சாப்பிட எதுவுமே இல்ல… காஸாவிலிருந்து கண்ணீர்விட்டு கதறும் சிறுவனின் வீடியோ..!

By Soundarya on ஆனி 21, 2025

Spread the love

காஸா-இஸ்ரேல் இடையே அக்டோபர் மாதம் போர் தொடங்கியது. இந்த போர் தற்போது பதினைந்து மாதங்களுக்கும் மேலாக நீட்டித்து வருகிறது. இந்த போரில் ஏராளமான மக்கள் கொல்ல ப்பட்டு விட்டார்கள். மேலும் மக்கள் தங்களுடைய வீடுகளை இழந்து பசி பட்டினியால் தவித்து வருகிறார்கள். தங்கள் கண் முன்னே தங்களுடைய உறவுகளை இழந்தும் தவித்து வருகிறார்கள். இதற்கிடையில் காசாவில் உள்ள குழந்தைகளுக்கு உணவு கிடைக்கவில்லை என்றும், அங்குள்ள குழந்தைகள் இறந்துவிடும் என்றும் ஐநா கவலை தெரிவித்து இருந்தது.

இப்படியான சூழலில் தான் தற்போது காசாவில் இருந்து சிறுவன் ஒருவன் பேசியா வீடியோவானது வெளியாகி தற்போது காண்போரை கண்கலங்க செய்கிறது. அதாவது அதில் மண்ணை உண்ணும் நிலைக்கு எங்களை கொண்டு வந்து விட்டீர்கள். இது சரியே இல்லை. சிறிதேனும் எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள். பசியாற்ற சிறிது மாவுப்பொருள்  வேண்டும். ஒவ்வொரு நாளும் உதவி பொருள் கொண்டு வந்த டிரக்கை நோக்கி நாங்கள் ஓடுகிறோம். ஆனால் உணவு கிடைக்கவில்லை. இது முறையா? இந்த நிலையை எப்போது மாறும்? என்று சொல்லி அந்த சிறுவன் மண்ணை சாப்பிடுகிறார். இந்த வீடியோ பார்ப்போரை கலங்கசெய்கிறது.