ரகுவரன் மரணத்திற்கு இதுதான் காரணம்… பல வருடங்களுக்கு பின் பகீர் தகவலை சொன்ன நடிகர் பப்லு..!!

By Soundarya on ஆனி 21, 2025

Spread the love

பாட்ஷா, அருணாச்சலம் உள்ள படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர்தான் ரகுவரன். கடைசியாக நடிகர் தனுஷின் யாரடி நீ மோகினி படத்தில் தனுஷிற்கு அப்பாவாக நடித்திருந்தார். அதன் பிறகு இந்த மண்ணுலகை விட்டு மறைந்து விட்டார். இவருடைய மரணம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரகுவரன் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் பப்லு பிரிதிவ்ராஜ், “நானும் ரகுவரனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம் .ரகுவரன் எனக்கு ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் சீனியர். அங்கு தான் எங்களுடைய நட்பு தொடங்கியது.

நாங்கள் இருவரும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருப்போம்.  கலர், ஸ்டைல் எல்லாமே ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால் என்னை விட அவர் உயரமாக இருப்பார். என்னுடைய கேர்ள் பிரண்ட் மற்றும் அவருடைய கேர்ள் பிரண்ட் இருவரும் நெருங்கிய தோழிகள் தான். ரகுவரன் போதை பொருளுக்கு அடிமையாகி விட்டதால் மூளையில் இருக்கும் நினைவு பகுதி செயல் இழந்தது விட்டது. இதுதான் அவருடைய உயிரிழப்பிற்கு காரணம். அவரை திருந்துவதற்கு நான் எவ்வளவு முயற்சி செய்தேன். ஆனால் உன்னுடைய வேலை எதுவோ அதை மட்டும் பார் என்று சொல்லிவிட்டார்” என்று கூறியுள்ளார்.