‘நான் சாகப் போகிறேன்.. I Love You அம்மா’… நள்ளிரவில் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு இளம் யூடியூபர் தற்கொலை… அதிர்ச்சி தரும் காரணம்….!

Spread the love

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல இளம் யூடியூபர் பானு கோமாளி (21), காதல் முறிவு காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், ஹைதராபாத்தில் தங்கியிருந்து பி.எஸ்.சி பயின்று கொண்டே பகுதிநேர யூடியூபராகச் செயல்பட்டு வந்தார். இவரது தாயார் சத்யா வரலட்சுமி தற்போது குவைத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி அதிகாலை 1:30 மணியளவில், பானு தனது தாய்க்கு வாட்ஸ்அப்பில் ஒரு உருக்கமான செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “‘I Love You So Much, அம்மா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன், தம்பியைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். காலையில் இந்த மெசேஜைப் பார்த்த தாயார், பதற்றத்துடன் மகளைத் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, தாயார் தனது நண்பர் ஒருவரை பானுவின் வீட்டிற்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அவர் அங்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, பானு மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த ராய்டுகிராம் காவல்துறையினர், பானுவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், பானுவுக்கும் அகில் என்ற மென்பொருளாளருக்கும் இடையே மூன்று ஆண்டுகளாகக் காதல் இருந்து வந்ததும், சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்ததும் தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே பானு இந்த விபரீத முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே 6 மாதங்களுக்கு முன்பு இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மீட்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது காவல்துறையினர் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

உங்க ஆதார் நம்பரைத் திருட முடியாது!… “இனி 12 இலக்க எண் தேவையில்லை.. இந்த 1 நம்பர் போதும்”… இந்த ஒரு ரகசிய ட்ரிக்கை உடனே ஃபாலோ பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…

9 minutes ago

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

24 minutes ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

40 minutes ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

50 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

52 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

58 minutes ago