Categories: CINEMA

“அழகு தான் அவளுக்கு முக்கியம்; அதனால் தான் உயிரே போச்சு”.. மனம் திறந்து பேசிய போனி கபூர்..!!

தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் முன்னணி நடிகர்களுடன் சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். பின்னர் பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துபாய் ஹோட்டல் குளியல் அறையில் நடிகை ஸ்ரீதேவி இறந்த நிலையில் கிடந்தார்.

உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்றபோது இந்த துயர சம்பவம் அரங்கேறியது. ஸ்ரீதேவியின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை அவர் எதிர்பாராதவிதமாக குளியல் அறை தொட்டியில் விழுந்து இறந்தார் என்பதை உறுதிப்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் போனி கபூர் அளித்த பேட்டியில், எனது மனைவியின் மரணம் இயற்கையானது அல்ல. அது தற்செயலாக நடந்த மரணம்.

திரையில் அழகாக காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீதேவி கடுமையான உணவு கட்டுப்பாட்டில் இருப்பார். உப்பு இல்லாத உணவையே சாப்பிட்டு வந்தார். இதனால் பலமுறை சோர்வடைந்து ஸ்ரீதேவிக்கு தலை சுற்றிலும் ஏற்பட்டு கீழே விழுந்து இருக்கிறார். ரத்த அழுத்தம் குறைவு பிரச்சினை இருப்பது குறித்து டாக்டர்கள் எச்சரித்தும் அதை ஒரு பெரிய விஷயமாகவே ஸ்ரீதேவி எடுத்துக் கொள்ளவில்லை. அவர் குளியல் தொட்டியில் தவறி விழுந்து தான் இறந்தார். அந்த நேரத்தில் துபாய் போலீசார் என்னை ஒருநாள் முழுவதும் விசாரித்தார்கள்.

எனக்கு உண்மை கண்டறியும் சோதனையும் செய்தார்கள். அதன் பிறகு தான் ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் தவறி விழுந்து இறந்ததை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். பிரேத பரிசோதனை அறிக்கை அவ்வாறே வந்தது. முன்னதாக நடிகர் நாகார்ஜுனா என்னை சந்தித்தபோது ஒரு விஷயத்தை கூறினார். ஒருமுறை நாகர்ஜுனாவோடு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்த போது கடுமையான உணவு கட்டுப்பாட்டில் இருந்ததால் படபிடிப்பில் சுயநினைவை இழந்து ஸ்ரீதேவி கீழே விழுந்து விட்டதாக அவர் என்னிடம் கூறினார் என போனி கபூர் தெரிவித்தார்.

Priya Ram
Priya Ram

Recent Posts

ஷூட்டிங் ஸ்பாட்டில் குஷ்புவின் கன்னத்தை பிடித்து பிரபு சொன்ன விஷயம்.. பிரபுவா அப்படி சொன்னாரு..? அது இன்னைக்கு வரைக்கும் மாறவே இல்ல..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

17 நிமிடங்கள் ago

உண்மைய சொல்லாம என்ன ஏமாத்திட்டீங்க… சுப்ரமணியபுரம் ஷூட்டிங்கில் சசிகுமாரிடம் அழுத ஸ்வாதி- அப்படி என்ன மறைத்தார் தெரியுமா?

2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…

1 மணி நேரம் ago

106 வயதில் எப்படி இதெல்லாம் செய்ய முடியும்..? இந்தியன் 2 ட்ரைலரால் வெடித்த சர்ச்சை.. இயக்குனர் சங்கர் கொடுத்த விளக்கம்..!

106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…

2 மணி நேரங்கள் ago

குட்டியான டவுசரில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ரட்சிதா மகாலட்சுமி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…

4 மணி நேரங்கள் ago

நீச்சல் குளத்தில் இருந்த படி புகைப்படத்தை வெளியிட்ட சூர்யா பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…

4 மணி நேரங்கள் ago

ஒரு போட்டோ கூட இன்ஸ்டால போட விட மாட்டாரு.. லேடிஸ்க்கு சினிமா எதுக்குன்னு திட்டுவாரு.. தந்தை KS ரவிக்குமார் குறித்து பேசிய மகள்..!

எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…

5 மணி நேரங்கள் ago