பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி கடந்த 2019 செப்டம்பர் மாதம் ஆஸ்திரியாவை சேர்ந்த பீட்டர் ஹக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் அவருடைய கணவருக்கு எதிராக மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குடும்ப வன்முறை வழக்கு தொடர்ந்துள்ளார் செலினா. அவர் தாக்கல் செய்த மனுவில், கணவர் பீட்டர் ஹாக் மனதளவில் துன்புறுத்துவதாகவும், பீட்டர் தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பி மிரட்டி, பிறருடன் உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், அவர் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதாகவும், தன்னுடைய பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை சொருகுவேன் என்று மிரட்டியதாகவும் செலினா கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
