திருநெல்வேலி மாவட்டம் பாளையஞ்செட்டிகுளத்தில் 2016 ஆம் வருடம் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் செல்வராஜ் என்பவருக்கு எதிராக வைகுண்டம் என்பவர் சாட்சி அளித்தார். இதையடுத்து வைகுண்டம் 2022 ஆம் வருடம் செல்வராஜ் உள்ளிட்ட 8 பேரால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த இன்றைய வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது.
இதில் சாட்சி வைகுண்டம் என்பவரை கொலை செய்த செல்வராஜுக்கு தூக்கு தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 3 பேருக்கு 2 மாதம் சிறை தண்டனை விதித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
