‘தெறி’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் அட்லீ.. ஹீரோயின் கீர்த்தி சுரேஷ்.. ஹீரோ யார் தெரியுமா..?

By Mahalakshmi

Updated on:

இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தெறி; இந்த திரைப்படத்தை
ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில்  இப்படத்தையும் இயக்குனர் அட்லி தான் இயக்க உள்ளதாக தகவல் கதிந்துள்ளது. இந்த ரீமேக் திரைப்படத்திற்கு  நடிகையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

   

2016 ஆம் ஆண்டு கலைப்புலி ஏசு தாஸ் தயாரிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் “தெறி” . இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்துள்ளார்கள். மேலும் இத்திரைப்படத்தில் பல முக்கிய நட்சத்திரங்களும் நடித்துள்ளார்கள். இந்த
திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த  ரீமேக் திரைப்படத்தையும் இயக்குனர் அட்லி தான் இயக்க உள்ளார். மேலும் இதில் நடிகையாக கீர்த்தி சுரேஷ் நடித்து பாலிவுடிலும் கலக்க போகிறாராம். மேலும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரத்திற்கு வருண் தவண் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு “பேபி ஜான்” என்ற  டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  இயக்குனர் அட்லீ வழங்கும் இந்த திரைப்படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ரீமேக் திரைப்படத்திற்கு  பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi