தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். கண்டக்டராக இருந்தவர் நாடகங்களில் நடித்தும் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பதற்கான பட்டயம் பெற்றும் திரையுலகில் என்ட்ரீ கொடுத்தார்.
முதன் முதலில் ரஜினிகாந்த் நடித்த படம் பாலச்சந்தர் இயக்கிய அபூர்வராகங்கள். அபூர்வராகங்களில் தொடங்கி ஜெய்லர் வரை சுமார் 179 படங்கள் நடித்துள்ளார். வயதானாலும் இன்றளவும் அவரை சூப்பர் ஸ்டார் என கொண்டாட ரசிகர் பட்டாளமே உள்ளது.
திரையுலகில் எவ்வளவு பெரிய நடிகராக அவர் இருந்தாலும் எளிமையாக பழகக் கூடியவராக ரஜினிகாந்த் இருந்துள்ளார். நடிகரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணாவுடன் இணைந்து ரஜினி முத்து, படையப்பா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதனிடையே ரமேஷ் கண்ணா நேர்காணல் ஒன்றில் ரஜினிகாந்த் பற்றி பகிர்ந்துள்ளார். ரவிக்குமாருடன் இணைந்து நடித்த ஒரு படத்திற்கு மைசூரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மாண்டியா என்ற பகுதியில் படப்பிடிப்பு எடுக்க வேண்டியது இருந்தது.
ரமேஷ் கண்ணா எந்த காட்சிகளை காலையில் படமாக்கலாம் என திட்டமிடுவாராம். அப்போது அவர் கே எஸ் ரவிக்குமாரிடம் ரஜினி அவர்கள் 7:00 மணிக்கு வந்தார் என்றால் குறிப்பிட்ட காட்சியை எடுத்துவிடலாம் என்று கூறியுள்ளார்.
அதற்கு கே எஸ் ரவிக்குமார் ரஜினி அவர் எப்படி அவ்வளவு காலையில் வருவார். வேறு ஏதாவது காட்சிக்கு தயார் செய்யுங்கள் என கூறியுள்ளார். இதைக் கேட்ட ரஜினி ஏன் நான் சீக்கிரம் வரமாட்டேன். நான் வருவேன் அதே நேரத்திற்கு தயார் செய்யுங்கள் என கூறியுள்ளார்.
அப்போதும் கே எஸ் ரவிக்குமாறு ரஜினியிடம் வேண்டாம் எனக் கூறியுள்ளனர். அவ்வளவு சீக்கிரம் உங்களால் வர முடியாது வேண்டாம் எனக் கூறியுள்ளனர். ஆனால் ரஜினி நான் கண்டிப்பாக வருவேன் என கூறிவிட்டார். சரி என்று அடுத்த நாள் படப்பிடிப்பு தளத்திற்கு 7 மணிக்கு முன்பாகவே பலரும் வந்துவிட்டனர்.
யாருமே இல்லாத அந்த இடத்தில் ஒருவர் மட்டும் போர்த்திக் கொண்டு தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாராம். 7 மணியை கடந்ததும் கேஎஸ் ரவிக்குமாரும் ரமேஷ் கண்ணாவும் ரஜினி இன்னும் வரவில்லையே, அவரால் இவ்வளவு சீக்கிரம் வர முடியாது என பேசிக் கொண்டார்களாம்.
அப்போது அங்கே படுத்திருந்த நபர் நான்தான் வந்து விட்டேனே என்று எழுந்து அமர்ந்தாராம். பார்த்தால் அது தான் ரஜினியாம். இப்படி மிக எளிமையாகவும் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒருவராகவும் தான் ரஜினிகாந்த் இருந்ததாக ரமேஷ் கண்ணா பகிர்ந்துள்ளார்.