அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்… பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்… எப்படி அப்ளை பண்ணனும் தெரியுமா…? முழு விபரம் உள்ளே…!!

By Swetha on ஆனி 29, 2026

Spread the love

தமிழக அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கான 2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதல் பொது கலந்தாய்வு குறித்த முக்கிய அறிவிப்பை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ளார். இத்துறையின் கீழ் உள்ள கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் நடந்து வரும் நிலையில், ஆசிரியர்களின் நலன் கருதி இந்த இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இக்கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் பேராசிரியர்கள், நூலகர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இந்த பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு தகுதியான ஆசிரியர்கள் ஜூன் 30, 2026 முதல் ஜூலை 7, 2026 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் பணியிட மாறுதல் கோரிக்கையை சமர்ப்பிக்க www.dcetransfer.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியைப் பயன்படுத்த வேண்டும். இந்த இணையதள பக்கத்திற்குச் சென்று, கேட்கப்பட்டுள்ள தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, தாங்கள் மாற விரும்பும் கல்லூரியைத் தேர்ந்தெடுத்து, அதற்கான உரிய காரணத்தைக் குறிப்பிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

   

சமீபத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது உயர்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆன்லைன் கலந்தாய்விற்கு முன்கூட்டியே விண்ணப்பிப்பவர்கள் மட்டுமே பொது இடமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியும் என்பதால், விருப்பமுள்ள தகுதிவாய்ந்த கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஜூலை 7ஆம் தேதிக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு உயர்கல்வித்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.