முட்டையை வேகவைத்தோ அல்லது ஆம்லெட்டாகவோ சாப்பிடுபவர்கள் பலர் உள்ளனர். இதில் எதை சாப்பிடுவது சிறந்தது என்ற கேள்வி உள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். வேக வைத்த முட்டையை சாப்பிடுவதன் மூலம் குறைந்த கலோரியுடன் கூடிய உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள முடியும். இது செரிமானம் மற்றும் ஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்றதாக உள்ளது. இதில் அதிக புரதச்சத்து உள்ளது. எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் டி மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு அவசியமான வைட்டமின் பி12 ஆகிய இரண்டு ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது. வேகவைத்த முட்டை கொழுப்புகள் இல்லாத ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.
ஆம்லெட் சாப்பிட விரும்பினால் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சேர்த்து சாப்பிடுவது நல்லது. மேலும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். அதேசமயம் அதிக எண்ணெய் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. மேலும் கலோரி மற்றும் கொழுப்பு சாப்பிடுவதை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் ஆம்லெட்டை தவிர்ப்பது நல்லது.
