பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஹீமா குரேஷி. தமிழில் ரஜினியுடன் காலா திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் போட்டோ சூட் எடுப்பது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என பிசியாக இருந்து வருகின்றார். இப்படியான நிலையில் இவர் குறித்து ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இவருடைய சகோதரர் பார்க்கிங் தகராறில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டின் பிரதான நுழைவு வாயிலில் பக்கத்து வீட்டுக்காரரின் வாகனத்தை அப்புறப்படுத்தும் படி நடிகையின் சகோதரர் ஆசிப் கூறியுள்ளார். ஆனால் பைக்கை எடுக்காமல் அவரை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளனர். டெல்லியில் நடந்த இந்த சம்பவம் பெறும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
