விஜயகாந்த் இருந்தப்பவே முதுகுல குத்திட்டாங்க.. எல்லாமே நம்பிக்கை துரோகிகள்.. பிரேமலதா ஆவேசம்…!

By Srimathi on ஆவணி 8, 2025

Spread the love

வேலூர் அண்ணாசாலையில் உள்ள திருமண மண்டபத்தில், தேமுதிக பூத் ஏஜென்ட் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அதில் , தே.மு.தி.க ஆட்சிக்கு வந்தால் மது கடைகள் அடைக்கப்படும், ரேஷன் பொருட்கள் மக்கள் வீடு தேடி வரும். தேமுதிக நிர்வாகிகள், தான் பெரியவர் என்ற ஈகோவை மறந்து தேர்தல் களத்தில் பணியாற்றினால், தங்களுக்கே வெற்றி கிடைக்கும். விஜயகாந்த் உயிருடன் இருந்தபோது கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு, பின்னர் இல்லை என்று முதுகில் குத்தி விட்டனர். நாம் நிறைய நம்பிக்கை துரோகிகளை பார்த்து விட்டோம். நீங்கள் விஜயகாந்தை மனதில் வைத்துக் கொண்டு போராட வேண்டும். நமக்கு எம்.பி, எம்.எல்.ஏ. க்கள் என ஆளுங்கட்சியினர் எந்தவித ஆதரவும் தெரிவிக்கவில்லை.

குடியாத்தத்தில் “மக்களை தேடி மக்கள் தலைவன் கேப்டன்” என்ற ரத யாத்திரை தொடங்க இருக்கிறோம். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நடைபயணத்தை மேற்கொண்டு, மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்க உள்ளோம். தற்பொழுது மேற்கொண்டு இருக்கும் முதல் கட்ட நடை பயணம், வரும் 23ஆம் தேதியோடு நிறைவுக்கு வருகிறது.

   

வரும் 24ஆம் தேதி நம் கேப்டனின் நினைவு நாளை முன்னிட்டு, கேப்டன் அறக்கட்டையில் இருந்து நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறோம். பின் வரும் 25ஆம் தேதி விஜயகாந்த் பிறந்தநாள் அது எங்கள் கட்சிக்கு மாபெரும் திருநாள். அவர் பிறந்த நாள் முடிந்தவுடன் இரண்டாம் கட்ட பிரச்சாரம் தொடங்க இருக்கிறது. மீண்டும் “மக்களை தேடி மக்கள் தலைவன்” என்கிற சந்திப்பை முடித்த பிறகு தான் யாருடன் கூட்டணி வைப்பது என்பதை தே.மு.தி.க அறிவிக்கும் என்றார்.