உத்தரகாண்ட் மாநிலம் ரானிகேத் பகுதியைச் சேர்ந்த மோகித் மெஹ்ரா என்பவர், பாகேஷ்வர் அரசு மருத்துவமனையில் எழுத்தராகப் பணியாற்றி வந்தார். அங்குள்ள அடௌலி கிராமத்தில் வாடகைக்கு தங்கி பணிபுரிந்து வந்த இவர், நேற்று மாலை திடீரென மாயமானார். அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று கோமதி ஆற்றுப்படுகையில் மோகித்தின் சடலம் மிதப்பது கண்டறியப்பட்டு, உடனடியாக மீட்கப்பட்டது. உடற்கூறாய்வுக்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது இதற்குப் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
