“13 வயது சிறுமியை முத்தமிட்ட சிறுவன்…” குடும்பத்தையே நிர்வாணமாக்கி இழுத்து சென்ற கொடூரம்… பதிலுக்கு போலீசார் போலீஸ் செய்த காரியம்… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on ஐப்பசி 27, 2026

Spread the love

தெற்கு கொல்கத்தாவில் 13 வயது சிறுமியை 17 வயது சிறுவன் முத்தமிட்டதாகக் கூறி, அச்சிறுவன் மற்றும் அவனது பெற்றோரைக் கொடூரமான முறையில் தாக்கி நிர்வாண ஊர்வலம் நடத்திய வழக்கின் குற்றவாளிகளை, கொல்கத்தா காவல்துறையினர் வெறும் உள்ளாடையுடன் வீதியில் கயிற்றால் கட்டி அழைத்துச் சென்று குற்றத்தை மறுஉருவாக்கம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுவன் ஒரு சிறுமியை முத்தமிட்டதைக் கண்ட சிறுமியின் உறவினர்கள், சிறுவன் மற்றும் அவனது பெற்றோரைத் கடத்திச் சென்று கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவதாகவும், போலீஸ் பொய் வழக்கில் சிக்க வைப்பதாகவும் மிரட்டி, தப்பிக்க வேண்டுமென்றால் ஆடைகளின்றி வீதியில் ஊர்வலமாகச் செல்ல வேண்டும் எனக் கூறி நிர்வாண ஊர்வலம் நடத்தி வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பரப்பியுள்ளனர்.

   

இச்சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களைக் கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை வெறும் உள்ளாடையுடன் வெறும் கால்களில் கயிற்றால் கட்டிச் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று குற்ற நிகழ்வை மறுஉருவாக்கம் செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாகப் பல்வேறு அரசியல் கட்சிகளிடையேயும் கடுமையான விவாதங்கள் வெடித்துள்ளன.