தெலங்கானா மாநிலம் வராங்கல் திரி-சிட்டி பகுதியான ஹனம்கொண்டா சுபேதாரி வனத்துறை அலுவலகம் அருகே உள்ள பிரதான சாலையில், இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மரத்தில் பிணமாகக் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் மற்றும் வாகன நடமாட்டம் மிகுந்த பிரதான சாலையிலேயே அந்த இளைஞரின் சடலம் கிடந்த போதிலும், அவரை யாரும் சரியான நேரத்தில் கவனித்து காப்பாற்ற வில்லையா அல்லது என்ன நடந்தது என்ற கேள்வி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுபேதாரி போலிஸார், இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இளைஞர் யார், அவர் எப்படி இறந்தார், கொலையா அல்லது அசம்பாவிதம் ஏதேனும் நடந்ததா என்பது குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்துத் தகராறிலும் வாடகை பணப் பிரச்சினையிலும் ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் சொந்தக் குடும்பத்தாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…
சமீபத்திய அரசியல் நகர்வுகளின் பின்னணியில், தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்காமல் எ.வ.வேலு விலகி நிற்பது…
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான விவகாரங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17 வயதே ஆன மைனர் சிறுவன் ஒருவன் காரை அதிவேகமாகவும் அலட்சியமாகவும் ஓட்டி வந்து, சாலையில்…
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேதுராஜ் - லலிதா தம்பதியரின் 28…
சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர், சென்னை…