தளபதி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், படு மாஸாக நேற்று வெளிவந்த திரைப்படம் லியோ. இத்திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதியின் வெறித்தனமான நடிப்பில் உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் மிகப் பிரமாண்டமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி சாதனை படைத்து வருகிறது. மேலும் இத்திரைப்படம் உலக அளவில் ஒரே நாளில் 148. 5 கோடி வசூல் செய்து வசூல் சாதனையும் படைத்துள்ளது.
நேற்று முன்தினம் பிரபல இசையமைப்பாளர் இமான் சிவகார்த்திகேயன் மீது ஒரு பெரிய குற்றசாட்டை வைத்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, ‘சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை நான் நன்றாக அறிவேன் அவர் படங்களில் என்னுடைய பாடல்கள் அனைத்தும் நன்றாக ஹிட் கொடுத்துள்ளது. ஆனால் அவர் செய்த துரோகத்தை என்னால் மன்னிக்க முடியாது .அதை தன்னால் வெளியில் சொல்ல முடியாது. அப்படி கூறினால் எனது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
அவரை மன்னித்தாலும், அவர் செய்த துரோகத்தை நான் கட்டாயம் மறக்கவே மாட்டேன். நான் நெருங்கி பழகிய நபர்களில் அவரும் ஒருவர். ஆனால் அவர் அப்படி எனக்கு ஒரு துரோகத்தை செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எதிர்காலத்தில் என் குழந்தைகள் மட்டும் என்னிடம் வந்து இதைப் பற்றி கேட்டால் நான் அவர்களிடம் மட்டும் சொல்வேன். இந்த ஜென்மத்தில் அவரது திரைப்படங்களில் நான் இனி இசை அமைக்க மாட்டேன்’ என்று வருத்தத்துடன் கூறியிருந்தார்.
இந்த பேட்டியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சமூகவலைத்தளங்களிலும் வெளியாகி பேசுபொருளாக மாறியது. நடிகர் சிவகார்திகேயனையும் , இமானின் முதல் மனைவியையும் சேர்த்து வைத்து விமர்சிக்க தொடங்கினர் நெட்டிசன்கள். இமானின் விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் அதை தான் இமான் இப்படி இலைமறை காயாக கூறியுள்ளார் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால் நேற்று லியோ திரைப்படம் ரிலீசாகி அதைப்பற்றிய பேச்சுக்கள் எழ தொடங்கியதும் சிவகார்த்திகேயன் சர்ச்சை அடங்கியது. தற்பொழுது இதனை ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயனை குறிப்பிட்டு ‘அப்பாடா லியோ கலவரத்துல நம்மள மறந்துட்டாங்க’ என்று பதிவு செய்து வம்புக்கு இழுத்துள்ளார். இதோ அவரின் ட்விட்டர் பதிவு…
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…