actor Sivakarthikeyan

இப்படி பச்சாதாபமா ஏன் பேசறாங்க… இந்த ஹீரோக்கள் திருந்த வாய்ப்பே இல்லையா? நடிகர் சிவகார்த்திகேயனை விளாசித் தள்ளிய பிரபலம்!

By Elango on மாசி 24, 2026

Spread the love

சமீபத்தில் கேரளாவில் நடந்த 70வது பிலிம்ஃபேர் விருது விழாவில் அமரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. அப்போது மேடையில் பேசிய நடிகர் சிவகார்த்திகேன், என் ரசிகர்களுக்கு நன்றி. எவ்வளவு பேர் என்னை எதிர்த்தாலும் என்னை பேசினாலும் கீழே போட்டு அடிச்சு துவைச்சு மிதிச்சாலும் என்னை தூக்கி தூக்கி மேடையில் நிக்க வெச்சுக்கிட்டே இருக்கீங்க என்று பேசியிருந்தார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில், சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் கூறியதாவது, துவைச்சது யார், மிதிச்சது யார்? சந்தோஷமான நிகழ்ச்சிகளில் கூட இப்படி பச்சாதாபமாக பேசி அறுப்பது ஏன்? கோலிவுட் ஹீரோக்கள் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை போல என்று அவர் கிண்டலாக கூறியிருக்கிறார்.