actor Rajinikanth

நீங்க போனா… என்னையும் போக சொல்லிடுவாங்க, சின்ன பசங்க விளையாட்டு இது… கண்டுக்காதீங்க – ரஜினிக்கு கமல் சொன்ன அட்வைஸ்!

By Elango on மாசி 24, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் இரு பெரும் துருவங்களாக உச்ச நட்சத்திர நடிகர்களாக ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளனர். 47 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிமுக பிரமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் டைரக்ட் செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் ரூ. 1000 கோடி வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது, எங்களுக்காக அடிச்சுக்குற ரசிகர்களுக்கெல்லாம் நாங்க பழகுவதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். ஒருமுறை ரஜினிகாந்த் என்கிட்ட வந்து, நான் சினிமாவை விட்டே போகப் போறேன். நம்ம ரெண்டு பேர் ரசிகர்களும் சண்டை போட்டுட்டு இருக்காங்கன்னு சொன்னார். அப்போ நான் சொன்னேன், நீங்க சினிமாவை விட்டு போயிட்டா என்னையும் போக சொல்லிடுவாங்க. அப்படியெல்லாம் முடிவு எடுக்காதீங்க. இதெல்லாம் சின்ன புள்ளைங்க சண்டை மாதிரின்னு சொன்னேன் என்று கமல்ஹாசன் அதில் கூறியிருக்கிறார்.