பயணத்தின் போது அந்த ஓட்டுநர் வேண்டுமென்றே தனது முதுகில் பலமுறை தகாத முறையில் தொட்டதாக அந்தப் பெண் வீடியோ ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் தற்செயலாக இருக்கலாம் என்று நினைத்தவர், பின்னர் ஓட்டுநரின் செயல் திட்டமிட்ட ஒன்று என்பதை உணர்ந்துள்ளார். மேலும், அந்த நபர் பெண்ணின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் அவர் எங்கு வசிக்கிறார் என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு அச்சுறுத்தியுள்ளார்.
మహిళతో బైక్ రైడర్ అనుచిత ప్రవర్తన.. వీడియో వైరల్
ర్యాపిడో రైడర్ తన పట్ల అసభ్యంగా ప్రవర్తించాడని అసోంకు చెందిన ఓ మహిళ ఇన్స్టాలో వీడియో షేర్ చేసింది. ప్రయాణ సమయంలో అతడు వీపు గోకుతున్నట్లు నటిస్తూ చేతితో పదేపదే అనుచితంగా తాకాడని, వ్యక్తిగత ప్రశ్నలతో వేధించాడని ఆరోపించింది. ఈ ఘటనపై… pic.twitter.com/58V0RlsiYW
— ChotaNews App (@ChotaNewsApp) February 23, 2026
பாதுகாப்பு கருதி அந்தப் பெண் தனது தங்கும் இடத்திற்கு அருகே வந்தவுடன் ஓட்டுநரின் கையை விலக்கச் சொல்லியும், அவர் அதை அலட்சியப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட அந்தப் பெண், பைக் டாக்ஸி போன்ற சேவைகளில் பெண்களின் பாதுகாப்பு குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் மற்றும் ரேபிடோ நிறுவனம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
