#image_title
இசை அமைப்பாளராக ஒரு காலத்தில் கலக்கிக் கொண்டிருந்த விஜய் ஆண்டனி தற்பொழுது நடிப்பிலும் கலக்கி வருகிறார். இவர் தற்பொழுது பல படங்களில் நடித்த வருகிறார். இவர் நடித்த ‘நான்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு திரை உலகில் சிறந்த நடிகர் என்ற ஒரு அடையாளத்தையும் இவருக்கு ஏற்படுத்தித் தந்தது. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது. விஜய் ஆண்டனிக்கு என்ற ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இறுதியாக இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு அவ்வளவாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு ‘ரோமியோ’ படம் ரிலீஸானது. எதிர்பார்த்த அளவிற்கு ரோமியோ படத்திற்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. தற்பொழுது பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் ‘ரோமியோ’ படத்திற்கு கொடுத்த விமர்சனம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த விமர்சனத்தில் அவர், ‘ரோமியோ படத்தின் கதை, திரைக்கதை ஒன்றும் எடுபடவில்லை என்றும், ஆக்ஷன் சீன், சென்டிமெண்ட், ரொமான்ஸ், சோகம் என எதுவாக இருந்தாலும் விஜய் ஆண்டனிக்கு வித்தியாசம் காட்டி நடிக்கத் தெரியவில்லை’ என்று விமர்சித்திருந்தார். இவரின் இந்த விமர்சனம் விஜய் ஆண்டனியை கோபத்தை தூண்ட , பதிலுக்கு அவர் , ‘பல நல்ல படங்களை தவறாக விமர்சித்து கொள்ளும் திரு. ப்ளூ சட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவங்க சொல்றதையெல்லம் உண்மை என்று நம்பி ரோமியோ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம், போய் பாருங்க புரியும். ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க’ என்று நெத்தியடி பதில் கூறியிருந்தார்.
இப்படி காலையிலிருந்தே பரபரப்பாக உள்ள ட்விட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனியின் பதிவிற்கு ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்துள்ளார். அந்த டீவீட்டில், ‘ சமீபத்தில் வந்த ரத்தம், கொலை மட்டுமலா . பல ஃபிளாப்களை தந்தவர். எப்படியாவது இந்த படத்தை ஓட்ட வேண்டிய கட்டாயம். தந்ததற்கு நாங்கள் தான் அனுதாபம் தெரிவிக்கணும். முதலிரவில் மனைவி சரக்கு அடிக்கும் போஸ்டரை வைத்து பப்ளிசிட்டி. ஆனால் மக்கள் இதைக் கண்டு கொள்ளாததால் இப்போது விமர்சகர்களை பிராண்டி வருகிறார். அடுத்தது சக்சஸ் மீட் வைத்தால் தமாசாக இருக்கும். கொஞ்சமாவது நடிக்க கத்துக்கோங்க. உங்க படம் நல்ல படமா மக்கள் சொல்லட்டும்’ என்று கூறியுள்ளார். இதோ அந்த ட்வீட்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…