Categories: சினிமா

சூப்பர் ஸ்டாரை கண்டபடி விமர்சித்த நடிகர் இப்போது ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்கப்போகிறாரா?  என்னப்பா சொல்றீங்க?

Spread the love

ரஜினிகாந்த் தற்போது தா.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் “வேட்டையன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில், துசாரா விஜயன் போன்ற பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளிவரவுள்ளது.

இத்திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது 171 ஆவது திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ்ஜுடன் கைக்கோர்க்கவுள்ளார். இத்திரைப்படத்தின் டைட்டில் டீசர் வருகிற 22 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்தது.

இந்த நிலையில் “தலைவர் 171” திரைப்படத்தில் மேலும் ஒரு முக்கிய நடிகர் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ரஜினிகாந்துடன் 80களில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். எனினும் ரஜினிகாந்தை அரசியல் ரீதியாக பல மேடைகளில் கடுமையாக விமர்சித்து பேசியவர் இவர்.

ஒரு கட்டத்திற்கு பிறகு இவர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கவே இல்லை. ஒரு முறை ஒரு இயக்குனர் ரஜினிகாந்திற்கு வில்லனாக நடிக்க அவரை அணுகியபோது, “வேண்டுமென்றால் ரஜினிகாந்தை என்னுடைய படத்தில் வில்லனாக நடிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினாராம். அந்தளவுக்கு ரஜினிகாந்த் மீது விமர்சனப் பார்வை கொண்டவர் இவர்.

இந்த நிலையில் “தலைவர் 171” திரைப்படத்தில் அந்த நடிகர் ரஜினிகாந்துடன் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த நடிகர்தான் சத்யராஜ்.

சத்யராஜ் ரஜினிகாந்துடன் இணைந்து “பாயும் புலி”, “மிஸ்டர் பாரத்”, “மூன்று முகம்”, நான் சிகப்பு மனிதன்” போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் அதன் பின் ரஜினிகாந்துடன் இணைந்து அவர் நடிக்கவே இல்லை. இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் சத்யராஜ் “தலைவர் 171” திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Arun

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

5 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

5 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

6 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

6 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

6 மணத்தியாலங்கள் ago