விஜய் ஆண்டனியின் சோழியை முடித்த கையோடு.. விஷாலின் கதையை முடிக்க தீவிரமாக இறங்கிய ப்ளூ சட்டை..!

By Mahalakshmi on ஏப்ரல் 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் எந்த திரைப்படங்கள் வந்தாலும் அந்த திரைப்படத்திற்கு விதவிதமான விமர்சனங்களை கொடுத்து வருபவர் ப்ளூ சட்டை மாறன். ஆனால் இவர் ஒரு திரைப்படத்திற்கு கூட நல்ல விமர்சனத்தை கொடுத்ததே கிடையாது. எந்த படமாக இருந்தாலும் அது எப்படி இருந்திருக்கலாம், அப்படி இருந்திருக்கலாம், இவ்வளவு கேவலமாக எடுத்து இருக்கிறார்கள் என மிகவும் ஓபன்னாக ரிவ்யூ கொடுப்பவர்.

   

அந்த வகையில் தான் தற்போது ரத்னம் திரைப்படத்திற்கும் சமீபத்தில் இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ரெமோ திரைப்படத்திற்கு கொடுத்திருந்த ரிவ்யூவை பார்த்து பலரும் கொந்தளித்து போயிருந்தார்கள். அதிலும் விஜய் ஆண்டனி நேரடியாக அவரை தாக்கி தனது twitter பக்கத்தில் கூட பேசி இருந்தார்.

   

 

அந்த வகையில் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் ரத்னம். இந்த திரைப்படம் குறித்து பேசி இருக்கின்றார் ப்ளூ சட்டை மாறன். அவர் கூறியதாவது: “இயக்குனர் ஹரியின் முந்தைய படங்களின் ஸ்மெல் ரத்னத்தில் ஹெவியாக இருந்ததால் ரசிகர்கள் கடும் காண்டு. கில்லி அதிரடி வசூல்.

சனி, ஞாயிறு நாட்களிலும் கில்லிதான் வின்னர். அடுத்த விஜய் ஆண்டனி, விஷால் படங்கள் வரும்போது துப்பாக்கி, கத்தி போன்ற சூப்பர் ஹிட் படங்களை ரீ-ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல். அதனை டாக்கில் செய்ய.. பிச்சைக்காரன், சண்டைக்கோழிகளை இறக்க பாதிக்கப்பட்ட முகாம் தீவிர ஆலோசனை. புதிய மொக்கை படங்களை பார்ப்பதை விட.. பழைய நல்ல படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதால் ரசிகர்கள் மிகவும் ஆறுதல்” என்று தெரிவித்திருக்கிறார்.