நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த தமிழ் புத்தாண்டுக்கு வெளிவந்த திரைப்படம் ரோமியோ. கணவன் மனைவிக்கு இடையேயான அழகான காதலை வெளிக்கொண்டுவரும் படமாக அமைந்திருந்தது. இந்த திரைப்படத்தை எப்போதும் போல ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து பேசியிருந்தார் விஜய் ஆண்டனி.

இப்படத்தில் ஒரே மாதிரியான பேஸ் எக்ஸ்பிரஷன் கொடுத்திருக்கிறார் என்றும் காதலியிடம் பேசும் போதும் வில்லனிடம் பேசும் போதும் மனைவியிடம் பேசும் போதும் ஒரே மாதிரியாக இருந்தது என்று பேசியிருந்தார். மேலும் இசையமைக்கும் வேலையை விட்டுவிட்டு எடிட்டிங் வேலையில் இறங்கி நன்றாக நடித்தவர்கள் எல்லாம் தூக்கி விட்டு இவரது முகத்தை மட்டும் குளோசாப்பில் வைத்து எடிட் செய்து இருந்தார்.

#image_title
இது மிக மோசமான செயல் என விமர்சித்திருந்தார். இதை பார்த்த விஜய் ஆண்டனி தனது twitter பக்கத்தில் பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக் கொள்ளும் திரு ப்ளூ சட்டை மாறன் போன்ற சிலருக்கும் இவங்க சொல்றது எல்லாம் உண்மை என்று நம்பி ரோமியோ போன்ற ஒரு சில திரைப்படங்களை கொண்டாடாமல் இருக்கும் அறிவு ஜீவுகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம்.

#image_title
இப்படத்தை அன்பே சிவம் போல் ஆக்கி விடாதீர்கள் என்று கூறியிருந்தார். இதற்கு முழு சட்டை மாறன் தற்போது பதில் அளித்து இருக்கின்றார். விஜய் ஆன்டனி பதிவை ஃபார்வேர்ட் செய்த ப்ளூ சட்டை மாறன் அந்த கடைசி லைன் என்று கூறி இருக்கின்றார்.
அந்த கடைசி லைன்… 🙂 pic.twitter.com/WsOmZtXUus
— Blue Sattai Maran (@tamiltalkies) April 20, 2024
அதாவது அன்பே சிவம் திரைப்படம் வந்த புதிதில் அப்படத்தை யாருமே அந்த அளவுக்கு கொண்டாடவில்லை. இப்போது ஆஹா ஓஹோ என்று போற்றப்படும் அளவிற்கு அப்படம் வெளியான சமயத்தில் பேரையும் புகழையும் பெறவில்லை என்பதை நாசுக்காக கூறி இருக்கின்றார் ப்ளூ சட்டை மாறன்.
