ரஜினி,விஜயெல்லாம் ஓரங்கட்டி.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் பட்டியலில் முதல் இடம்.. ஒரே படத்துல தட்டி தூக்கிய பிரபலம்..!

By Mahalakshmi on சித்திரை 20, 2024

Spread the love

570 கோடி சொத்துக்களை வைத்திருக்கும் நடிகர்கள் யார் என்பதை இதில் நாம் தெரிந்து கொள்வோம். தமிழ் சினிமாவை பொறுத்தவரை டாப் நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித், தனுஷ், சூர்யா. கடந்த சில நாட்களாக தென் திரைப்படங்கள் மட்டுமே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

   

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய துறைகளை சேர்ந்த நட்சத்திரங்கள் இந்தி திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார்கள்.இதனை பான் இந்தியா படம் என்று கூறி வருகிறார்கள். தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் நடிகர் கமலஹாசன் தான் இன்று தம் பணக்கார பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

   

 

தற்போது ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்களில் கமலஹாசனும் ஒருவர். பாக்ஸ் ஆபிஸ் திரைப்படங்களை பொருத்தவரையில் நடிகர் ரஜினிகாந்த்திற்கும் விஜய்க்கும் எப்போதும் போட்டியிருந்து வருகிறது.தமிழ் பணக்கார நடிகர்கள் பட்டியலில் அடுத்து இருப்பது நடிகர் ரஜினிகாந்த் தான்.

இவரின் சொத்து மதிப்பு 450 கோடியாகும். விஜய்யின் சொத்து மதிப்பு 410 கோடி. அதைத் தொடர்ந்து பணக்கார தமிழ் நட்சத்திரங்களாக அஜித்குமார் 350 கோடி சொத்து மதிப்புடனும் சூர்யா 300 கோடி சொத்து மதிப்புடனும் கார்த்திக் 110 கோடி சொத்து மதிப்புடனும்.

தனுஷ் 160 கோடி சொத்து மதிப்புடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள். இவர்களை விட கமலஹாசன் முன்னோடியாக இருக்க காரணம் விக்ரம் திரைப்படம் தான். இந்த திரைப்படம் தான் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த சாதனை படைத்தது. இதனை தனது சொந்த தயாரிப்பில் தயாரித்திருந்தார் கமலஹாசன். இதுவே ரஜினிகாந்தின் சொத்து மதிப்பை முறியடிக்க உதவியது என்றே கூறலாம்.